Sunday, 2 October 2011

ஒரு நிமிடக் காதல் கதை..



ட்ரிங் ட்ரிங்....

என்னடா?

இன்னிக்கு ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா!

அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து சேர்றேன்.அதுக்குள்ள ஃபோனை போட்டு இன்னிக்கு சீக்கிரம் வரச் சொல்ற. இன்னிக்குன்னு பார்த்து இங்கயும் வேலை அதிகமா இருக்குமா.
போடா உனக்கென்ன! எனக்கென்னமோ இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. யேய் ப்ளீஸ்பா, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வாயேன்.

ம்ம்ம்… சரி இன்னிக்கு நான் சீக்கிரம் வந்துட்டா என்ன தருவ.

என்ன வேணும்.

நீயே சொல்லு.

ஹ்ம்ம். நேத்து ஆசையா கேட்டியே. நான் கூட வெட்கப்பட்டுக்கிட்டு மாட்டேன்னுட்டனே. அதைத் தரேன்.

என்ன கேட்டேன். மறந்துட்டனே.

திருடா தெரியாத மாதிரி நடிக்கறியா. அதான் முத்து படத்தில ரஜினி கேட்கற மாதிரி கேட்ட இல்லை. தரேன். போதுமா?

நிஜமா?

நிஜம்ம்ம்ம்ம்ம்மாதான்

அப்புறம் பேச்சு மாற மாட்டியே?

மாட்டேன்.

சத்தியமா?

சத்… யேய், நான் சொன்னா நம்ப மாட்டியா நீ.

சரி சரி நம்பறேன்.அதுக்கு முன்னாடி நீ ஃபோனை வெச்சுட்டு வந்து கதவைத் திற.

கதவை…..What? என்ன சொன்ன.

வந்து கதவைத் திற. தெரியும்.













ப்பச்சக்..

No comments:

Post a Comment