Thursday, 22 May 2014

விஜயநகர் பேரரசர்கள்

ஒரே மொழி பேசக்கொடிய சோழனும் பாண்டியனும் நாட்டின் எல்லைகளை இரண்டாக வகுத்து கொண்டு ஒருவனை ஒருவன் மாறி மாறி அடித்துக் கொண்டு போர்க் களத்தில் செத்து மடியும் வேளையில், தாங்கள் கட்டிவைத்த கோயில்களுக்கும், செய்து வைத்த அற்புதமான ஐம்பொன் திருமேனிகளுக்கும் அப்படியொரு ஆபத்து வந்து சேரும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். 

இருவரும் போரிட்டு ஒரு வழியாக சோழன் சுவடே தெரியாமல் சுத்தமாக அழிந்தே விட, பாண்டியன் சற்று பலம் குன்றி இருந்த நேரத்தில் வடக்கில் இருந்து வந்தார்கள் முஸ்லிம் மன்னர்கள், கோயில்கள் அனைத்தும் அடித்து தரை மட்டமாக்கப்பட்டது, சிலைகள் அனைத்து உடைத்து நொறுக்கப்பட்டது, தடுத்தவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. 

அப்படி ஒரு சம்மவத்தை தமிழ் மக்கள் அது வரை பார்த்தததே இல்லை, ஜென்ம விரோதிகளான சோழனும் பாண்டியனும், சாளுக்கியனும், பல்லவனும் மோதிக்கொண்ட போது கூட ஒருவர் நாட்டை மற்றொருவர் கைப்பற்றும் போது அவர்கள் எழுப்பிய கோயில்களை எதிரி நாட்டவர் தொட்டதில்லை, இவர்கள் யார் புதிதாக? 

எங்கிருந்து வந்தார்கள்? 

அது ஒரு குழுப்பமான காலம், தமிழத்தை ஆண்ட மூன்று பெரிய பேரரசும் வீழ்ந்துவிட்டது. யார் இனி நம்மையும் நம் கோயில்களையும் காப்பாற்றப்போகிறார்கள் என்று தலை மீது தமிழ் மக்கள் கை வைத்து அமர்ந்திருந்த நேரத்தில், துங்கபத்தரை நதிக்கரை ஓரத்தில் அற்புதமான ஒரு ஒளி உதயமானது, முஸ்லிம் மன்னர்களிடம் போராடி தமிழகத்தில் இருந்து அவர்களை முழுவதும் விரட்டி, தமிழகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் விஜயநகர் பேரரசர்கள். 

கர்நாடக மாநிலம் ஹம்பியில் அமைந்திருந்தது அவர்களின் தலை நகர் நமக்கு மேலே இருந்ததால் அவர்களைக் கடந்து தமிழகம் வர முடியவில்லை. பெரிய அரணாக இருந்து தடுத்து நம் ஊரில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை காப்பாற்றியவர்கள் அவர்கள். தமிழகத்திற்கு அது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லலாம் பாதியில் நின்ற கோயில்களை முழுமையாக்கியது, விண்ணை முட்டும் ராஜ கோபுரங்களை எழுப்பியது, ஆயிரம் கால் மண்டபங்கள் அமைத்தது ,அந்த மண்டபத்தில் நிற்கும் தூண்களில் ஆள் உயர பிரம்மாண்ட அற்புத சிலைகள் செய்தது என அவர்கள் செய்து வைத்துச் சென்ற வேலைகள் ஏராளம், அற்புதமான மனிதர்கள், அவர்களின் வரலாறு நம்மில் பலருக்கு தெரியவே தெரியாது. பண்டைய ரோம் நகரைக் காட்டிலும் பெரிய நகராக விளங்கிய ஹம்பி கடைசியாக முஸ்லிம் மன்னர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எழுப்பி இருந்த அற்புதமான கோயில்கள் அனைத்தும் இடித்து நொறுக்கப்பட்ட எச்சங்களை இன்றும் நாம் காணலாம். தங்கள் கோயில்களை இழந்து அவர்களை அங்கு தடுத்து நிறுத்தி இருக்காவிடில் இன்றைக்கு இங்கும் எதுவுமே இருந்திருக்காது! அந்த அற்புதமான வீரர்கள் இன்றும் நம்முடைய கோயில்களில் குதிரையின் மீதி வீரமாக தாவிக் கொண்டு தான் இருக்கிறார்கள், திரும்பிப் பார்க்க கூட ஆளில்லாமல்!

Monday, 19 May 2014

Life Quotes 6


Life Quotes 5


Life Quotes 4


Sunday, 18 May 2014

இடம் பொருள் ஏவல்

இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள். 

உதாரணத்திற்கு...
  • ஒரு ஏழை நபர் முன் நமது பணத்தை பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு நோயாளிக்கு முன் நமது உடல் நலம் பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு பலவீனமான நபர் முன் நமது சக்தி பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு சோகமான நபர் முன் நமது மகிழ்ச்சியை பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு கைதி முன் நமது சுதந்திரம் பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு முதிர்கன்னியின் முன்பு நமது வாழ்க்கைத்துணையைப்பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு குழந்தை இல்லாத நபர் முன் நமது குழந்தைகள் பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு அனாதை முன் நமது தந்தை பற்றி பேச வேண்டாம்.
  • ஏனெனில்,அவர்கள் காயங்களை மேலும் தாங்க முடியாது