Friday, 16 May 2014

மேலான ஒன்று


பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான்.

போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன* வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

 "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.
மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

நீதி : அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

நீதிக்கதை


ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.
அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான்.

குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

 இது காதலுக்கும் ,நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.

 எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்.

உண்மை

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது

கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.

அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.

உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.

1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.

2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.

3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.

4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.

எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…

உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!

கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பதுதான் உண்மையான அர்த்தம்…

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

Thursday, 15 May 2014

Life Quotes 3


முன்னோர்களின் விஞ்ஞானம்


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

Wednesday, 14 May 2014

ஆப்பிள் பீட்ரூட் காரட் ஜூஸ்


A + B + C .... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .

இந்த பானம் அருந்துவதால் பயன்கள்:
  • புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.
  • ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
  • மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
    நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .
  • உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
  • இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.
  • பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.
  • மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.
  • உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
  • கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.
  • அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்.

புற்று நோயை குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம்

புற்று நோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

1. சோற்று கற்றாழை 400 கிராம்


2. சுத்தமான தேன்      500  கிராம்

3. whisky(or)brandy 50  மில்லி (மருந்தாக மட்டும்)



தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்

தோலை நீக்கிவிடக்கூடாது

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து  மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

     இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

      இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்... !

Life Quotes 2


Tuesday, 13 May 2014

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை நீங்க அருந்தும் பானத்திற்கு உரிய
தேவையான பொருள்கள்:
  • 1 கப் எலுமிச்சை சாறு 

  • 1 கப் இஞ்சிச் சாறு 

  • 1 கப் பூண்டு சாறு 

  • 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். 
 

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்


சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை  அருந்துங்கள் மகிழ்ச்சியுடன், சுவையாகவும் இருக்கும்.

 நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Life Quotes 1


சுவாமி விவேகானந்தர்

உலக மக்கள்

இன்று கடவுளை கை கழுவி விடுகிறார்கள்

காரணம் கேட்டால் கடவுள்
 
எங்களுக்கு என்ன செய்தார்
 
என்று கேட்கிறார்கள். நீங்கள்
 
கேட்பதை எல்லாம் கொடுக்க கடவுள்
 
ஒன்னும் நகர சபை அதிகாரி அல்ல.

- சுவாமி விவேகானந்தர் .

சமையல் அறை குறிப்புகள்

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.
*அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை வீணாக்காமல்
செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம்
கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்
பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில்
பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம்
வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால்
புளிக்கவே புளிக்காது.
*காய்கறிகளை வேகவைக்கும்போது
அதிக தண்ணீர் வைத்து வேக
வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின்
சத்துகள் போய்விடும். அதில்
உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.
*பச்சை மிளகாயை காம்புடன்
வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான
இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*காபி டிகாஷன்
போடுவதற்கு முன்
சுடு தண்ணீரில் டிகாஷன்
பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்
இறங்கிவிடும்.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால்
குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.
*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில்
உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால்
சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.
*முட்டைகோசில் உள்ள
தண்டை வீணாக்காமல் சாம்பாரில்
போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத்
துணியில் முடிந்து வைத்தால்
காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால்
கூடுதல் சுவையாக இருக்கும்.
*சமையலில் உப்பு அதிகமாக
போய்விட்டால்
உருளைகிழங்கை அதில்
அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்
இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில்
தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
நன்றாக வரும்.