Thursday, 29 September 2011
கணவனை முதுகில் சுமந்து ஆட்சியை மீட்ட அரசி
கெல்ப் என்ற மன்னன் பவேரியா நாட்டின் அரியணையிலிருந்து ஆட்சி செய்தவன். வீரத்தில் சிறந்த அவன். கண்ணை இமை பாதுகாப்பதுபோல மக்களைப் பாதுகாத்து வந்தான். திடீரென ‘காண்ட்ராட்’ என்ற பேரரசன் பவேரியா மீது படையெடுத்தான். கெல்ப் மன்னன் தளராது அவனை எதிர்த்துப் போர் செய்தான். காண்ட்ராட் வெற்றி பெற்றான். வெற்றிபெற்ற வேந்தன், கெல்ப் மன்னனின் நகருக்குத் தீ வைத்தான்.
ஆனால், அரசகுலப் பெண்கள் மட்டும் தங்களால் தூக்கிச் செல்லும் அளவுக்கு முதுகில் சுமையுடன் வெளியேறிச் செல்ல அனுமதி வழங்கினான். அரசகுலப் பெண்கள் பொன், பொருள் போன்றவற்றை உதறித் தள்ளிவிட்டுத் தங்கள் உயிரினும் மேலான கணவன், குழந்தைகளை முதுகில் சுமந்தபடி வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கெல்ப் மன்னனின் மனைவியும் அரசனை முதுகில் சுமந்து வெளியேறிக் கொண்டிருந்தாள்.
இக்காட்சியைக் கண்ட காண்ட்ராட் மன்னன் உள்ளம் உருகியது. தன் கணவன்மீது அரசிக்கு இருந்த பாசத்தையும் பற்றுதலையும் அவன் உணர்ந்தான். உடனே தான் வெற்றி பெற்ற பவேரியா நாட்டை கெல்ப் மன்னனிடம் கொடுத்துவிட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment