Sunday, 12 May 2013

சிவ அம்சம் பொருந்திய ஹனுமார்


அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்?

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே போலவே ஆஞ்சநேயருக்கும் சிறிய திருவடி என்ற சிறப்பு பட்டம் உண்டு ராம அவதாரத்தில் பகவானுக்கு தொண்டு செய்து தாசானுதாசனாக வாழ்ந்ததனால் இந்த சிறப்பை அனுமன் பெறுகிறார்

அத்தகைய அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர் என்பது அதியசயமான உண்மையாகும் திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான் அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான்

குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாச நாதன் அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான் அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை ஆனால் மகாபதிவிரதையாக ஒரு மகளை பெறுவாய் அவள் மூலம் என் அம்சத்தில் உனக்கொரு பேரன் பிறப்பான் என்று வரம் கொடுத்தாராம்

குஞ்சரன் மிகவும் சந்தோசபட்டான் குழந்தை இல்லையே என்று வருந்துவதை விட பிள்ளை கலி தீர்க்க பெண் குழந்தையாவது பிறக்கட்டுமென்று தவத்தை முடித்து வீட்டுக்கு போனான் அவனுக்கு சில நாளில் அஞ்சனா என்ற அழகான மகள் பிறந்தாள்

கன்னிபருவம்' எய்திய அஞ்சனா தேவி கேசரி என்ற வானர வீரனை காந்தர்வ முறையில் மணம் முடித்தாள் அஞ்சானா தேவி முன் குறத்தி வடிவாக வந்த தர்மதேவதை திருவேங்கட மலைக்கு சென்று தவம் செய் அதன் பயனாக தேஜசும் வீரியமும் நிறைந்த மகன் பிறப்பான் என்று சொன்னாள்

அஞ்சனா தேவியும் திருமலை சென்று தனது தவத்தை துவங்கினாள் பக்தி சிரத்தையோடு அவள் செய்த தவம் வாய்வு பகவானுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவள் தவத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்று விரும்பி தினசரி ஒரு பழத்தை அவள் அறியாமல் அவள் முன்னால் வைத்து போனான் ஒருநாள் சிவபூஜைக்காக வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அவள் இருந்த இடத்தில் வைத்து விட்டான்

கண்விழித்து பார்த்த அஞ்சானா தேவி தன்முன்னால் இருந்த பழத்தை வணங்கி சாப்பிட்டாள் அப்போதே அவள் கர்பவதியானாள் சிவனுக்கான பழம் என்பதனால் சிவ அம்சத்தோடும் வாயு பகவான் அதை கொடுத்ததினால் வாயு புத்திரனாகவும் அஞ்சனா தேவிக்கு பிறந்த அனுமான் கருதபடுகிறார்

எனவே ஆஞ்சநேயர் சைவ வைஷ்ணவ ஒற்றுமை சின்னம் என்றே கருததக்கவர் ஆவார் அவரை பக்தியோடு வணங்கினால் பக்தர்கள் வேண்டி விரும்பி கேட்கும் நியாயமான கோரிக்கைகள் எதை வேண்டுமென்றாலும் நிறைவேற்றி வைப்பார்.

நான் என்ன உன் அடிமையா.. ?


கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"